யாழில் ஹெரோயினுடன் கைதானவர் பொலிஸ் காவலில்


யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. 

பொம்மை வெளி பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த நபரை கைது செய்த பொலிஸார்  அவரது உடைமையில் இருந்து 5 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டிருந்தனர். 

அதனை அடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மன்று அனுமதிக்க வேண்டும் என பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். 

பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்று , சந்தேகநபரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதித்தது.

No comments