யாழ். போதனாவில் 'ஓ பொசிடிவ்' குருதிக்கு தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 'ஓ பொசிடிவ்' குருதி வகைக்குத் தற்போது அதிதீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குருதி வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'ஓ பொசிடிவ்' குருதி வகைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, தற்போது தட்டுப்பாடு மேலும் தீவிரமாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, 'ஓ பொசிடிவ்' வகை குருதி உடையவர்கள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு நேரடியாக வருகைதந்து குருதிக் கொடையில் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குருதி வங்கிப்பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment