தலைமன்னாரில் கஞ்சி பானி இம்ரானின் துப்பாக்கி ரவைகள் மீட்பு ?
தலைமன்னார் பகுதியில் பொலிஸாரின் ரீ சேர்ட் ஒன்றுடன் KPI என பெயர் எழுதப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன
தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவற்றை மீட்டிருந்தனர்.
அதன் போது பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் , ரி - 56 ரக துப்பாக்கி ரவைகள் 67 ஐ மீட்டிருந்தனர். அவற்றில் 37 துப்பாக்கி ரவைகளில் KPI என எழுதப்பட்டுள்ளது.
KPI என்பது பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான கஞ்சி பானி இம்ரான் என்பதனை குறிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment