சிறீதரன் மீது மொட்டு குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, தன்னைக் கொல்ல திட்டம் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எங்களைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.நாங்கள ஆவியாக வந்து பின்தொடர்ந்து பழிவாங்குவோம் எனவும் தசநாயக்க பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நோக்கி தெரிவித்துள்ளார்.
எனினும் அனுர அரசின் அமைச்சர்கள் அத்தகைய குற்றச்சாட்டை மறுதலித்துள்ளனர்.
இதனிடையே தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி, சாமர சம்பத் தசநாயக்க இன்று சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பியுள்ளார்.
தன் மீது பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணையைத் தடுக்க சிறீதரன் தான் உறுப்பினராக உள்ள அரசியலமைப்பு சபைக்கு முறைப்பாடு தெரிவிக்கத் தவறிவிட்டார்.
சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்பு சபையின் பொறுப்பாகும்.
தனது சொந்த வழக்கின் முடிவைப் பாதிக்கக்கூடிய முடிவுகளில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி சார்பாக தசநாயக்க முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளார்

Post a Comment