இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொது மக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி நுழைவாயிலில் முன்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1987 ஒக்டோபர் 11 ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில்கொக்குவில் பிரம்படி பகுதிகளில் நடைபெற்ற படுகொலைகளை தொடர்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 26 பொதுமக்கள், படுகொலை செய்யப்பட்டனர்.

Post a Comment