தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது.
ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.
யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது இலங்கை மக்கள் அனைவருடைய கோரிக்கையாக தான் பார்க்கிறேன்.
நடத்தப்பட வேண்டிய தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது.
ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.
அரசியல் கட்சிகளுடைய தலைவர்களோடும் இலங்கையினுடைய பல்வேறு சமூகங்களின் உடைய அரசியல் சமூக பிரமுகர்களோடும் சந்திப்புக்களை நடாத்தி வருகிறேன்.
அந்த வகையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மாகாண சபை தேர்தலை எவ்வாறு நடத்த வைப்பது? என்பது பற்றியும் மாகாண ஆட்சிக்கான அதிகாரங்களை எப்படி முழுமையாக முறையாகவும் பெற்றுக் கொள்வது என்பது பற்றியே அமைந்தது என தெரிவித்தார்.
Post a Comment