யாழில் மீன் வலைகளுடன் இருவர் கைது


யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து நேற்று  திங்கட்கிழமை (29) நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராக இருந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பூர்வ மீன்பிடித்தலை ஊக்குவித்தல் மற்றும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன், சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுக்க கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, யாழ்ப்பாணப் பகுதியில் 2025 செப்டம்பர் 29 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படைக் கப்பல்களான காஞ்சதேவ மற்றும் வேலுசுமண ஆகிய நிறுவனங்கள் யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்திய இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காகத் தயாராக இருந்த 857 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். 

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 25 மற்றும் 54 வயதுடைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் கொட்டடி மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


No comments