பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபத்தின் வணக்க நிகழ்வு
தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு , மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24 வது
நிகழ்வின் பொதுச் சுடரினை ஈஷ்டாம் தமிழ் தேசிய கல்விக்கூட தலைமை ஆசிரியர் திருமதி சுஜீவா ரவிசங்கர் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தமிழீழ தேசியக் கொடியினை தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மீதும் மிகுந்த பற்றுக் கொண்ட உணர்வாளர் செல்வி வைஷ்ணவி ரகுபதி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
ஈகைச்சுடரினை 06/10/1997 ல் பெரியமடுவில் சிறீலங்கா படைகளுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த பசுபதிப்பிள்ளை உதய குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட லெப்டினல் கேணல் அல்லது கோபி அல்லது திருப்புகழ் அவர்களின் சகோதரியும் 23/03/1999 ல் சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் வீரச்சாவடைந்த இராசதுரை சபேசன் என்கின்ற இயற்பெயர் கொண்ட லெப்டினன் மதினன் அவர்களின் மைத்தினியுமான திருமதி வனிதா ரமேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
அகவணக்கத்தினை தொடர்ந்து ஈஷ்டாம் தமிழ் தேசிய கல்விக்கூட ஆசிரியர்களான திருமதி யசிந்தா ஐங்கரன் , திருமதி டயானி ரகுபதி ஆகியோர் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்கள்.
தியாக தீபம் திலீபன் மற்றும் தளபதிகளின் திருவுருவப்படங்களுக்கு பொதுமக்கள் மலர் வணக்கம் மற்றும் தீப வணக்கம் செலுத்தினார்கள்.
தொடர்ந்து செல்வன் துஷாந்த் ரவிசங்கர் , செல்வன் ஆதவன் தயாளபவன் ,செல்வி . தேனுகா தயாசீலன் மற்றும் திருமதி செல்வம் பரமேஷ்வரி ஆகியோர் எழுச்சி கவிதைகள் வழங்கினார்கள்.
ஈஷ்டாம் தமிழ் தேசிய கல்விக்கூடம் சார்பாக , திருமதி டயானி ரகுபதி அவர்களின் நெறியாகையில் தமிழினி பிரதீபன் ,சனோஜா கலைச்செல்வன், சாம்பவி ரகுபதி ,வைஷாணா நவநீதன் மற்றும் தமிழ் தேசிய கல்வி கூட மாணவர்கள் சைந்தவி தயாளபவன், ரிபாணி திருக்குமார்,அர்ச்சனா அந்தோணி பிள்ளை ஆகியோரின் நடனம் இடம் பெற்றது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்கின்ற பாடல்களை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடி கையேந்தப்பட்டு நிகழ்வானது நிறைவந்தடைந்தது.
href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQwEMe3IGGVDgDRYCnHRd44p7TtTq_bFPj559DopeLDd3vQQ4x42ougB5VFxC-l7mmaDcm2LKD3G6LYB2BxzVDwiXWM2uQyKtiUfLI3TtxOVHFOpkUShb9YBMVp-x9E2iEF12hNP49oEBht9_naoB7vX4JZ4qIARB4zAAZPM7KDe8jfw2ZprGWyr9-140/s1600/79ff0497-e68a-44c0-b906-53cb9e1960a5.jpeg" style="display: block; padding: 1em 0; text-align: center; ">

Post a Comment