காணி மோசடி - நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது


நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் வீரவன்ஷ பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணி மோசடி வழக்கு தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments