அருச்சுனாவிற்கு பிணை


கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

அண்மையில் கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அருச்சுனா தனது வாகனத்தை நிறுத்தி சென்றிருந்தார். 

போக்குவரத்து விதியை மீறி அவர் வாகனத்தை நிறுத்தி சென்றதாக தெரிவித்த கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரியை  திட்டியிருந்தார். 

அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்ட நிலையில் , நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவரை இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதி வழங்கியது.

No comments