கிளிநொச்சியில் STF துரத்தி சென்ற நபர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு


கிளிநொச்சியில் பொலிஸ் சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட நபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேக நபரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்ய சென்றபோது, அவர் தப்பிச்செல்ல முற்பட்டு  கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments