யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது


யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயது உடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்களிடமிருந்து 27 கிராம் 100 மில்லி கிராம் அளவுடைய ஐஸ் போதப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments