யாழில். நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் - ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுணாவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி , எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment