தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்


தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் , சுடரேற்றி , திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து , மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து, 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி உணவையும், நீரையும் தவிர்த்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 12ஆவது நாளான 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு தியாக தீபம் உயிர்நீத்தார்.






No comments