மாகாணசபை நடக்குமா:இலலையா??

 



எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளது. தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு தடை வராமல் அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என அனுர அரசின் துணை அமைச்சர் மகிந்த ஜெயசிங்க யாழில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாகாணசபை மட்டுமே தீர்வென கங்கணங்கட்டியுள்ள இந்தியா மாகாணசபை தேர்தலை நடாத்த அனுர அரசை கோரி களைத்துள்ளது.

இந்நிலையில் தமது முன்னாள்களை களமிறக்கி தேர்தல் வேண்டுமென குரல் எழுப்ப வைத்துள்ளது.

இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த தேர்தலை விரைவாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் எழுப்பப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்; இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை நேற்று முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments