மூதூரில் விபத்து! ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!


திருகோணமலை மூதூர் காவல்துறைப் பிரிவின் பச்சநூர் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (08)காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மகிழுந்து ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments