நீதியின் ஓலம் :வெற்றி!
தமிழ் மக்களிற்கான சர்வதேச நீதிகோரும் நீதியின் ஓலம்" என்னும் மாபெரும் கையொப்பப் போராட்டம் கடந்த சனிக்கிழமை வடக்குக்கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் ஆரம்பமாகி முடிவுக்கு வந்துள்ளது.
போரட்டம் மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணத்தின் செம்மணியில் ஆரம்பமாகி நேற்று அதே இடத்தில் நிறைவுற்றது.
"நீதியின் ஓலம்" எனும் கையொப்பப் போராட்டம் தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி வடக்குக்கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.
செம்மணியில் போராட்ட நிறைவில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபைக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கும் அனுப்பிவைப்பதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. செம்மணி விடயம் உட்பட இனஅழிப்பு மற்றும் இதரக் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையையும் நீதிப் பொறிமுறையையும், நிரந்தரத் தீர்வையும் வலியுறுத்தியதாக அறிக்கை அமைந்துள்ளது.
அதேவேளை சர்வதேச நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்திப் பவனி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான, சனிக்கிழமை (30) வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கிலும் கிழக்கிலும் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம் செம்மணியில் இப் போராட்டம் நடைபெறவுள்ளது.; போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் யாழிலிருந்து ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தி அங்கிருந்து இந்த ஊர்திப் பவனி ஆரம்பமாகியிருந்தது.
ஊர்திப் பவனி பல்வேறு இடங்களுக்கும் சென்று போராட்டம் நடைபெறும் செம்மணியை சனிக்கிழமை (29) காலை வந்தடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment