நல்லூர் ஆலய சூழலில் வாள் வெட்டில் ஈடுபட்ட ஐவரும் விளக்கமறியலில்


நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 05 இளைஞர்களையும் கடுமையாக எச்சரித்த யாழ் . நீதவான் , ஐவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்தார். 

சம்பவம் தொடர்பில் ஐந்து இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐவரையும் யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர். 

அதனை அடுத்து ஆலய சூழலில் வன்முறையில் ஈடுபட்ட ஐவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான் , ஐவரையும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது 


No comments