பிசுபிசுத்து போனது சுமந்திரனின் ஹர்த்தால் - யாழில் இயல்வு நிலை
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில், பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன.
முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் , வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தாலையே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் , அதனால் இராணுவத்தினரை வெளியற்றுமாறும் கோரி தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம். ஏ சுமந்திரன் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக 15ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் மன்னார் மடு தேவாலய பெருநாள் என்பதால் , 18ஆம் திகதியான இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது.
கதவடைப்பு போராட்டத்திற்கு தம்முடன் கலந்து ஆலோசிக்கவில்லை என வர்த்தக சங்கங்கள் , யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் , பொது அமைப்புகள் குற்றம் சாட்டி , போராட்டத்திற்கு ஆதரவு வழங்க மறுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும் , பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது.
அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன் , அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகிறது.
Post a Comment