டக்ளஸ் நீதி கேட்கிறார்?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து செம்மணி புதைகுழியின் பின்னணியிலிருந்ததான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் மனிதப் புதைகுழி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுப்பியுள்ளார்.
கடந்தகால உள்நாட்டு யுத்தம் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளில் குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மனித புதைகுழிகள் பற்றிய விடயம், இன்னமும் எமது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அவ்விடயம் தொடர்பில் எமது மக்களிடையே நிலவுகின்ற குழப்ப நிலையை மேலும் தூண்டிவிடுவதாக சில சுயலாப அரசியல் சக்திகளின் கருத்துகளும், செயற்பாடுகளும் அமைந்து வருகின்றன.
அத்தகைய மனித புதைகுழிகள் தொடர்பில் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை கடந்த காலத்தில் அமைக்கப்பட்டிருந்த காணமற்போனோர் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆணைக்குழு மேற்கொண்டிருந்தது. இருப்பினும் அறிக்கை மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் எமது மக்களிடையே திருப்பதியற்றதொரு நிலை காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.
எனவே, தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையில், மீள் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்வதற்கென சுயாதீனமானதொரு ஆணைக்குழு அமைக்கப்பட்டால், மக்கள் தங்களது வாக்குமூலங்களை, கருத்துக்களை முன்வைப்பதற்கும், அவை தொடர்பில் ஆராய்ந்து, விசாரணைகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும் என நம்புகின்றேனென டக்ளஸ் தேவானந்தா,தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து செம்மணி புதைகுழியின் பின்னணியிலிருந்ததான குற்றச்சாட்டுக்கள் ஆர்ப்பாட்டகாரர்களால் டக்ளஸ் மீது முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment