காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவை புனரமைக்க நடவடிக்கை


சுற்றுலாத்துறை  அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார். 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 131.20 மில்லியன் ரூபா நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அத் திட்டங்களில்  உள்ளடங்கியுள்ள காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை விரைவாக புனரமைப்புச் செய்வது தொடர்பாக மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அதற்கமைய மாவட்ட செயலர்  நிலமைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். 

அதன்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். 

No comments