வவுனியாவில் திருடப்பட்ட 35 பவுண் நகைகளுடன் இளைஞன் கைது


வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து திருடப்பட்ட 35 பவுண் தங்க நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,  கொக்குவெளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து , மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருடப்பட்ட 35 பவுண் நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


No comments