யாழில். 17 சபைகளுக்கு தேர்தல் - 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டி
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.
குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக 6 ஆயிரத்து 320 அதிகாரிகளும், 1048 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையாற்றவுள்ளனர்.
இதேநேரம் யாழ் மாவட்டத்தில் 243 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இலங்கை போக்குவரத்து சபைக்கான 50 பேருந்துக்களும், தனியார் பேருந்து 143 பேருந்துக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இடம்பெயர்ந்து பருத்தித்துறை பிரதேசத்தில் வசிக்கும் வாக்காளர்களை ஏற்றி வருதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கு கடற்படையினர் படகு போக்குவரத்து ஒழுங்களை செய்துள்ளனர்.
Post a Comment