யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் - பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்கரை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.
தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் , பிள்ளையுடன் அவர் தும்பளை பகுதியில் வசித்து வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Post a Comment