நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்
நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் இன்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளரான முருகேசு அமிர்தமந்திரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளர்.
தாக்குதலுக்கு இலக்கானவர், தலையில் காயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment