உதவி மரணத்தை அனுமதிக்கும் சட்டத்தை பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்!


கொடிய நோயின் கடைசிக் கட்டங்களில் உள்ள சிலருக்கு உதவி இறப்பு உரிமையை அனுமதிக்கும் பிரேரணையில் பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

பிரேரணைக்கு ஆதரவாக 305 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். குறிப்பாக 199 வாக்குகள் வித்தியாசத்தில் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டது. நோய்த்தடுப்பு சிகிச்சைக்கான உரிமையை உருவாக்கும் ஒரு தனி மசோதா எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. 

இப்போது இது தேசிய சட்டமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்கு முன்பு மேல் சபையான செனட்டிற்கு அனுப்பப்படும். 2027 ஆம் ஆண்டுக்குள் இது சட்டமாக மாறும் என்று ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உதவி இறப்பு முறையை அனுமதிக்கும் எட்டாவது நாடாக பிரான்ஸை மாறவுள்ளது.

நோய்த்தடுப்பு சிகிச்சை தேவைப்படும் பிரெஞ்சு நோயாளிகளில் 48% பேருக்கு அது கிடைப்பதில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பிரேரணை உயிருக்கு ஆபத்தான மற்றும் அதன் முற்றிய அல்லது இறுதி கட்டங்களில் உள்ள தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான உடல் உபாதை மற்றம் உளவியல் துன்பத்தில் இருப்பவர்களுக்கானது.

நோயாளி தனது நோக்கத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். அவர்கள் 48 மணி நேரம் காத்திருந்து பின்னர் அதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த பிரேணை சட்டாக்கப்பட்ட பின்னர் மரண மருந்தளவை நோயாளி தானே நிர்வகிப்பார். அல்லது நோயாளி இயலாதவராக இருந்தால் மருத்துவ உதவியாளரால் நிர்வகிக்கப்படும். சக மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் மருத்துவரால் அங்கீகாரம் வழங்கப்படும்.

No comments