கெஹெலியவுக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய தினம் புதன்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment