தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; 12 பேர் படுகாயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், 12 பேர் காயமடைந்த நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வான் ஒன்று , கனரக வாகனத்துடன் மோதியதிலையே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை முலட்டியன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலிம்பட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
Post a Comment