தயார்: வாக்களிப்பில் மரணமும் வரலாம்?





இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கிலுள்ள மாநகரசபைகள்,நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்குமான அனைத்து தேர்தல் வாக்களிக்பு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வாக்களிக்க செல்வோர் வெப்ப பாதிப்புக்குள்ளாகாமல் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

நூளை சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயரும் என்றும், காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை கடுமையான வெப்பத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வெப்ப அலையால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்களைத் தடுக்க, வாக்களிக்க வரிசையில் நிற்கும்போது பாதுகாப்பாக தரித்து நிற்க வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

வெப்ப அலையின் தீவிரம் ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். சில சந்தர்ப்பங்களில், இது ஆபத்தானது எனவும் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


No comments