யாழில். தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியை சேர்ந்த முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.
தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளை , திடீரென மயக்கமுற்ற நிலையில் , பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையில் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
Post a Comment