இலங்கையின் அபிவிருத்திக்கு ஐ.நா ஆதரவளிப்பு
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் அபிவிருத்திக்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று (15) இடம்பெற்ற சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche இதனை உறுதிப்படுத்தியதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி, சமாதானம், ஐக்கியம் மற்றும் நிலையான முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Post a Comment