உக்ரைன் மீது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது ரஷ்யா!


உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதலை நடத்தியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்தது.

இன்று வியாழக்கிழமை உக்ரைனின் டினிப்ரோவை குறிவைத்து அஸ்ட்ராகான் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ரஷ்யா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இது உண்மையாக இருந்தால் போரில் முதல் முறையாக கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை பயன்படுத்தும் நாடாக ரஷ்யா இருக்கிறது. இது பல்லாயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரம் சென்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.

இந்த தாக்குதலின் போது ஆறு Kh-101 க்ரூஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் ராணுவம் கூறுகிறது.

இந்த ஏவுகணை எந்த இலக்கைக் குறிவைத்து தாக்கியது. அதனால் எந்தவகையான சேதங்கள் ஏற்பட்டவை என்பதை உக்ரைன் இராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை.

அமெரிக்கா உக்ரைனுக்கு ATACMS போன்ற நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய சில நாட்களுக்குப் பின்னர் ரஷ்ய இராணுவத் தளங்களை குறிவைக்க உக்ரைன் இந்த வார தொடக்கத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை நடதியதாகக் கூறப்படுகிறது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சாத்தியமான ICBM தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அது பற்றிய கேள்விகள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்யப் படைகள் இரண்டு பிரிட்டிஷ் தயாரிக்கப்பட்ட Storm Shadow குரூஸ் ஏவுகணைகளை இடைமறித்ததாகக் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. ஆனால் அந்த ஏவுகணைகள் உக்ரேனிய அல்லது ரஷ்ய பிரதேசத்தின் மீது சுடப்பட்டதா என்பதைக் குறிப்பிடவில்லை.

ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் இரண்டு பிரிட்டிஷ் தயாரிப்பான Storm Shadow cruise missiles, 6 US தயாரிப்பான HIMARS ரியாக்டிவ் ஏவுகணைகள் மற்றும் 67 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது என்று ரஷ்ய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

No comments