ஆமி குறைப்பு : நாமலிற்கு வந்ததே கோபம்!



வடக்கில் படைகுறைப்பினை அனுர அரசு முன்னெடுப்பதாக  பொதுஜன பெரமுன குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ச வட மாகாணத்தில் இராணுவ முகாம் அண்மையில் அகற்றப்பட்டமை மற்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற திட்டமிட்டுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

மக்களுக்கு நிலத்தை மீள விடுவிப்பது பிரச்சினை இல்லை என்றாலும், தேசிய பாதுகாப்பில் விட்டுக்கொடுப்பு சமரசம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படைகளுடன் கலந்தாலோசித்து அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு அல்லது தெற்காக இருந்தாலும், புவியியல் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், தேசிய பாதுகாப்பைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தலிற்கு முன்னதாக அனுர அரசினால் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் வெறும் ஒரு கிலோமீற்றர் நீளமுடைய வீதி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


No comments