கொங்கோவில் சிறை உடைப்பு முயற்சியில் 129 கைதிகள் பலி!


கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் சிறையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக சிறையை உடைக்கும் முயற்சியில் குறைந்தது 129 பேர் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தலைநகர் கின்சாவில் உள்ள மக்காலா சிறையில் நடந்தது.

அச்சிறையிலிருந்து 24 கைதிகள் வெளியேற முயன்றபோது சிறை அதிகாரிகளால் துப்பாக்கியில் எச்சரிக்கை நடத்தியபோது கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசல் தவிர, சிறையின் நிர்வாக கட்டிடம், உணவு கிடங்குகள் மற்றும் மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டது. குழப்பத்தில் ஐம்பத்தொன்பது பேர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அச்சிறையிலிருந்து தப்பிக்க முயன்றபோது நொிசல் காரணமாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஷபானி லுகூ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1,500 கைதிகளை மட்டுமே அடைக்கக் கூடிய சிறைச்சாலையில் 12,000க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை கூறுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.

No comments