ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பலி! ஹிஸ்புல்லா உறுதி செய்தது!


லெபனானில் இயங்கி வரும் உலகின் சக்கிவாய்ந்த  ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் அவருடன் இருந்த ஏனைய தளபதிகளும்  கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் அறிவித்தது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தின் மீது இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்களை எவ்-35 ரகப் போர் விமானங்கள் மூலம் நடத்தியது.

4 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட நிலக்கீழ் தாக்குதல் குண்டுகள் பல வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலிலேயே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு கூறியது.

ஹெஸ்பொல்லாவின் தெற்கு முன்னணியின் தளபதி அலி கராக்கி உட்பட  லெபனானை தளமாகக் கொண்ட குழுவின் மற்ற மூத்த உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்தது.

ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை பயமுறுத்த முடியாது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது தொடர்பில் ஹிஸ்புல்லா அமைப்பின் சார்பாக இதுவரை எந்தவொரு மறுப்போ அல்லது அறிக்கையும் வரவில்லை.

ஹிஸ்புல்லாஹ் தனது தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இழந்த போதிலும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தற்போது நஸ்ரல்லாவின் இறப்பை ஹிஸ்புல்லா உறுதி செய்தது.

No comments