பேருந்து விபத்து: ஈரானில் 28 பாகிஸ்தானியர்கள் பலி!
மத்திய ஈரானில் பாகிஸ்தான் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த 23 பேரில், ஆறு பேர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்து சிகிற்சை பெற்று வெளியேறிவிட்டனர். மேலும் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்தவர்களில் 11 பெண்களும் 17 ஆண்களும் அடங்குவர். பேருந்தில் இருந்த 51 பயணிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
மத்திய ஈரானின் யாஸ்த் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரேக்குகளை செயலிழக்கச் செய்ததாக ஈரானின் போக்குவரத்துப் பொலிசாரால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஈரானிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட படங்கள், பேருந்து தலைகீழாக மாறியதைக் காட்டுகிறது, அதன் கூரை உடைக்கப்பட்டு அதன் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இரங்கல் தெரிவித்துள்ளதார். ஈரானில் நடந்த பேருந்து விபத்தில் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகியிருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் மேலும் தெரிவித்தார்.
ஷியைட் நாட்காட்டியின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான அர்பயீனின் புனித நாளைக் குறிக்க பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் ஈரானில் இருந்து ஈராக் நோக்கிச் சென்றனர்.
முஹம்மது நபியின் பேரனான இமாம் ஹுசைன் மற்றும் அவரது தோழர்கள் கி.பி 680 இல் கர்பலா போரில் இறந்ததை இது குறிக்கிறது.
ஹுசைனின் கல்லறை என்று நம்பப்படும் ஈராக்கின் கர்பலாவில் உள்ள ஒரு கோவிலுக்கு பல ஷியாக்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.
Post a Comment