எக்ஸ் தளத்திற்கு 10 நாட்களுக்கு தடை: வெனிசுலா அதிபர் அறிவிப்பு!
பத்து நாட்களுக்கு எக்ஸ் அல்லது ருவிட்டர் தளத்தை அணுகுவதை முடக்குவதாக வெனிசுலா நாடு அறிவித்துள்ளது. இந்த அணுகலை தடுக்கும் ஆணையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கையெழுத்திட்டார். அத்துடன் நேற்று வியாழக்கிழமை அரச தொலைக்காட்சியில் உரையாற்றி மதரோ எக்ஸ் தளம் மக்கள் பாவனையில் இருந்து விலக்கப்படும் எனக் கூறினார். எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் அனைத்து விதிகளையும் மீறியதாக அவர் கூறினார்.
எலொன் மக்ஸ் வெறுப்பு, பாசிசம், உள்நாட்டுப் போர், மரணம், வெனிசுலாவின் மோதல் ஆகியவற்றைத் தூண்டுவதன் மூலம் விதிகளை மீறியுள்ளார் மற்றும் அனைத்து வெனிசுலா சட்டங்களையும் மீறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மஸ்க் எக்ஸ் தளத்தில் பிரதான எதிர்க்கட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். வெனிசுலா மக்கள் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான நேரம் இது எனப் பதிவிட்டார்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மதுரோவால் பெரிய தேர்தல் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டினாா. சர்வாதிகாரி மதுரோவுக்கு அவமானம் என்று எழுதினார்.
மதுரோவின் புத்திசாலித்தனத்தை ஒரு கழுதையுடன் ஒப்பிட்டு, வெனிசுலா மக்கள் இந்த கோமாளியை போதும் என்றார்.
சமீப வாரங்களில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்து. வெனிசுலாவின் பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 28 அன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, சுயேச்சை பார்வையாளர்களால் ஜனநாயகமற்றது என்று விவரிக்கப்பட்டது, மேலும் அதன் வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக பிரதான எதிர்க்கட்சி கூறியுள்ளது.
நாட்டின் தேர்தல் ஆணையமான தேசிய தேர்தல் கவுன்சில் (சிஎன்இ) தேர்தலின் போது சைபர் சதிக்கு இலக்காகியதாக மதுரோ கூறினார். மஸ்க் தனது மறுதேர்தல் முயற்சியில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா, அர்ஜென்டினா, உருகுவே மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளின் அரசாங்கம் எதிர்க்கட்சி வேட்பாளர் கோன்சாலஸை வாக்கெடுப்பின் வெற்றியாளராக அங்கீகரித்துள்ளன.
வெனிசுலாவின் உச்ச நீதிமன்றம் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமைக்குள் தங்கள் சொந்த வாக்கு எண்ணிக்கையை சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
மதுரோ வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாகக் கூறினார்.
ஆனால் விசாரணையில் கலந்துகொள்வது அதிகாரமின்மை மற்றும் உரிய நடைமுறை மீறல் காரணமாக முற்றிலும் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோன்சலஸ் கூறினார்.
வெனிசுலாவில் எதிர்க்கட்சி வெற்றிவெற்றால் அந்நாட்டிலிருந்து மின்கலம் தயாரிக்கும் லித்தியத்தை எடுக்கும் கனவில் எலொன் மக்ஸ் இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ஆர்ஜென்ரினால் அமெரிக்க சார்பு அதிபர் வெற்றிபெற்றதால் அங்கிருந்து எலோன் மக்ஸ் லித்தியத்தை எடுத்துக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் அமெரிக்காவும் தனது சார்பு வேட்டபாளர் வெற்றி பெற்றிருந்தால் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லும் கனவில் இருந்தது என்பது இங்கே நினைவூட்டத்தக்கது.
Post a Comment