அம்பாறையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!


அம்பாறை, பொத்துவில் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை லாஹுகல வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments