சரத் இந்தியாவுடன் பேசியது என்ன?


இந்தியாவிற்கு பயணித்து பேச்சுக்களை நடாத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா நாளை (09) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்த அவர், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோரை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகாவின் இந்திய விஜயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், அவரது எதிர்கால அரசியல் ஆதரவு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கா அல்லது அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடைக்குமா என்பது தொடர்பில் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

எனினும் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதன் மூலம் சஜித் பிரேமதாசவுக்கான குடைச்சலை நீடிக்க வைப்பதே ரணிலின் சதியென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர்களுள் ஒருவரான  அனுரகுமார திசநாயக்கவும் இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments