சபுமல்கஸ்கட விகாரை :ரணிலின் தமிழருக்கான விசேட பரிசு!

 


வவுனியா சிங்கள குடியேற்றத்தில் நிறுவப்பட்ட சபுமல்கஸ்கட விகாரை வரும் 31 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றது 

நல்லாட்சி அரசங்கம்  அதிகாரத்திலிருந்த போது வவுனியாவின் கொக்கச்சாங்குளம்--ஊற்றுக்குளம் பகுதியில் ‘சபுமல்கஸ்கட தொல்லியல் வேலைத்தல’ என்கின்ற பலகை நாட்டப்பட்டு இவ் விகாரைக்கான கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன 

2009 இற்கு பின்  பெருமெடுப்பில் பரவலாக்கப்பட்ட சிங்கள குடியேற்றத்தின் மையங்களில் ஒன்றாக  இந்த விகாரை உருவாக்கபட்டு இருக்கின்றது 

வவுனியாவின் குடியேற்றங்கள் கச்சல்சமளங்குளம், முதலிக்குளம், ஊற்றுக்குளம், கொக்கச்சாங்குளம் ஆகிய தமிழ் கிராமங்களின் எல்லைக்கோட்டின் வழி நகர்ந்து வவுனியா வடக்கின் வெடிவைத்தகல்லு வரை பரவலாக்கப்பட்டு தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு (வெலிஓயா)  சிங்கள குடியேற்றங்கள்  வரை பரவி வருகின்றது 

அதாவது வெலிஓயா குடியேற்றங்களை  தற்போது சம்பத்நுவர பிரதேச செயலகமாக மாற்றி அதற்குள் இந்தக்   வவுனியா சிங்கள குடியேற்ற கிராமங்களை இணைக்க தொடங்கி இருக்கின்றார்கள் 

அந்த வகையில் இந்த சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குள் ஊஞ்சல்கட்டி, மருதோடை, பட்டிக்குடியிருப்பின் பெரும் பகுதிகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு செறிவாக பரவலாக்கப்படும் ஆக்கிரமிப்பை மையப்படுத்தி அதன்பௌத்த சிங்கள அடையாளமாக சபுமல்கஸ்கட விகாரை நிறுவப்பட்டுள்ளது 

குறுந்தூர் மலையில் கட்டப்பட்டுள்ள விகாரையின் தலைமை பிக்கு கல்கமுவ சாந்தபோதி தேரர் அவர்கள் தா ன் சபுமல்கஸ்கட விகாரையையும் நிர்வகிக்கின்றார் 

திருகோணமலை துறைமுகம் ஊடக இலங்கைக்கு  கொண்டு வரப்பட்ட புத்தரின் பல் அனுராதபுரம் கொண்டு செல்லும் போது இந்த  சபுமல்கஸ்கட வழியாக பயணித்தது என்பதற்கு பல ஆதாரம் இருப்பதாக இந்த பிக்கு உரிமை  கோருகின்றார்

No comments