180 கிலோ பாலாடைக்கட்டிகள் திருட்டு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட யேர்மன் காவல்துறை அதிகாரி!


யேர்மனியில் செடார் பாலாடைக்கட்டிகளைத் (சீஸ்) திருடிய காவல்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

யேர்மனியில்  பாலாடைக்கட்டிளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்து நடந்த இடத்தைப் பாதுகாப்பதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். குறித்த அதிகாரி ஆயுதம் மற்றும் சீருடையுடன் காவல்துறையின் சிற்றூர்தி ஒன்றை எடுத்துச் சென்ற விபத்துக்குள்ளான பாரவூர்தியிலிருந்து 180 கிலோ கிராம் பாலாடைக்கட்டிகளைத் திருடியுள்ளார்.

விபத்து நடத்த இடத்தில் பாரவூர்தியில் இருந்த சால்வேஜ் நிறுவனத்தின் ஊழியரை குளிரூட்டப்பட்ட கொள்கலனிலிருந்து சேதமடையாத பல பாலாடைக்கட்டிப் பொதிகளை ஒப்படைக்குமாறு கூறினார். 

மொத்தம் 9 பாலாடைக்கட்டிப் பொதிகளை அவர் காவல்துறையின் சிற்றூர்தியில் ஏற்றியுள்ளார். இதன் மொத்த பெறுமதி 554  யூரோக்களாகும்.

குறித்த காவல்துறை அதிகாரி பாலாடைக்கட்டிப் பொதிகளை மீ்ண்டும் காவல்நிலைய அலுவலத்திற்கு எடுத்துச் சென்றார்.

நேற்று செவ்வாய்கிழமை Rhineland-Palatinate உயர் நிர்வாக நீதிமன்றம் காவல்துறை அதிகாரியின் மேல்முறையீட்டை நிராகரித்தது. அத்துடன் அவரை பணிநீக்கம் செய்வதற்கான முடிவை எதிர்த்து நீதிமன்றில் மேற்முறையீடு செய்தபோது அதில் அவர் தோல்வியடைந்தார்.

இவர் பாலாடைக் கட்டிகளை  தனக்காகவும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காகவும் சிலவற்றை வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.

நான் பாலாடைக் கட்டிகளை சாப்பிடவில்லை என்றும் விபத்துக்குள்ளான பாலாடைக் கட்டிகள் விற்பனைக்கு உகத்தவையல்ல என்ற காரணத்தால் அதை அழிக்காமல் அதைக் காப்பாற்ற விரும்பியதாக குறித்த காவல்துறை அதிகாரி நீதிமன்றில் விளக்கம் அளித்தார்.

குற்றவாளியான காவல்துறை அதிகாரியின் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.குறித்த நபர் சீருடை அணிந்து சேவை ஆயுதத்துடன் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் திருடியதாகக நீதிமன்றம்  கூறியது.


காவல்துறை அதிகாரியின் இந்த நடத்தையால், நாட்டின் காவல்துறையின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்தினார் என்று நீதிமன்றம் தொிவித்தது.


பாலாடைக்கட்டி ஒப்பீட்டளவில் குறைந்த மதிப்புடையது என்பது குற்றவாளியின் பொருத்தமற்றது. திருட்டைத் தடுப்பது அதிகாரியின் கடமை என்று நீதிமன்றம் மேலும் கூறியது.






No comments