செக் குடியரசில் தொடருந்து விபத்து: 23 பேர் காயம்!!
செக் நகரமான பார்டுபிஸில் புதன்கிழமை பிற்பகுதியில் சரக்குத் தொடருந்தும் பயணிகள் தொடருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 23 பேர் காயமடைந்தனர். அத்துடன் இரண்டு தொடருந்தின் ஓட்டுநர்களும் உயிர் தப்பியுள்ளனர்.
ஸ்லோவாக்கியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ப்ராக் நரகரிலிருந்து கோசிஸ் வரை இரவு பயணித்த விரைத் தொடருந்து உள்ளூர் நேரப்படி 23.00 மணியளவில் பார்டுபிஸில் உள்ள பிரதான தொடருந்து நிலையத்திற்கு அருகில் சரக்குத் தொடருந்துடன் மோதியது. இதில் பயணிகள் தொடருந்து தடம் புரண்டது.
பயணிகள் தொடருந்தில் 300 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பயணிகளை மீட்டனர். மீட்கப்பட்ட பயணிகள் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Post a Comment