பேருந்துகள் நேருக்கு நேர் மோதின: 50க்கு மேற்பட்டோர் காயம்!!


கடுவலை, ரனால பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30 மாணவர்கள் உட்பட 50 பேர் வரையில் காயமடைந்தனர்.

இன்று புதன்கிழமை எம்பிலிப்பிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் நவகமுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சைகள் வழங்கப்பட்டன.

No comments