அனுமதி கிடைக்கவில்லை:இரா.சாணக்கியன்!



இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் இனவாதத்தை கையிலெடுக்கமாட்டார்கள் என்பது கவனத்திற்குரியதென இலங்கைக்கான கனேடிய தூதர் யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை நடாத்தியுள்ள அவர் ஜனாதிபதி தேர்தல் மற்றும் வடக்கு தமிழ் மக்களது மனநிலையை நாடிபிடித்து பார்ப்பதில் அக்கறை காண்பித்திருந்தார்.

இதனிடையே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும் சம அந்தஸ்தையும் வழங்காது இலங்கை தீவை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது வெறும் கனவு மாத்திரமே. இதனை பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் ஜனாதிபதியிடம் சலுகைகளை பெற்றுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஜனாதிபதியை ஆதரிக்கும் நிலைக்கு தள்ள முடியும் என எதிர்பார்க்கின்றனர்.

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல சலுகைகள் கிடைத்துள்ளன.

ஆனால் பல தசாப்தங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு தொடர்ச்சியாக கோரி வருகிறோம். ஆனால், கொடூர குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்குகின்றனர்.அவ்வாறான நிலையில் ஜனாதிபதியிடம் சலுகை பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சலுகைக்காக சோரம் போய்க்கொண்டிருப்பதாகவும் இரா.சாணக்கியன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


No comments