இந்தியா ஊதித்தளளுகின்றது
பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு பேரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் அவர்கள் மத தீவிரவாதிகள் அல்லர் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
எங்கள் புலனாய்வு அமைப்புகள் இந்த விஷயத்தில் ஒரு கண் வைத்திருக்கிறது. இந்தியா சென்ற நான்கு பேரிடம் விரிவான விசாரணை நடந்து வருகிறது, அவர்களது சகாக்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
நடந்து கொண்டிருக்கும் விசாரணை குறித்து என்னால் கருத்துக் கூற முடியாது. எனினும், கைது செய்யப்பட்ட நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள், மதவெறியர்கள் அல்ல. அப்படி எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்..
Post a Comment