யாழில். சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் கைது


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்த வேளை, 200 லீட்டர் கோடா மற்றும் 06 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். 

அத்துடன் , குறித்த வீட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட அளவெட்டி பகுதியை சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

No comments