யாழில். விபத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், சிறுவன் உயிரிழந்துள்ளான்.

நீர்வேலி பகுதியை சேர்ந்த வேதரன் கலைப்பிரியன் (வயது 16) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சிறுவன் உழவு இயந்திரத்துடன் மோதியதில், சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளனர்.

No comments