சைபர் தாக்குதலுக்கு இலக்கானது பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம்!


பிரித்தானியப் இராணுவத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை சைப்பர் தாக்குதல் மூலம் திருடப்பட்டதை அவதானித்ததாக பிரித்தானியா இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இத்தாக்குதல்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை பிரித்தானியா குறிப்பிடவில்லை. என்றாலும் முக்கிய சந்தேக நபராக சீன அரசு இருக்கிறது என பிரித்தானியா நம்புகிறது.

பாதுகாப்பு அமைச்சகம் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு ஊதிய முறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். சீன சைபர் தாக்குதலுக்கான அனைத்து அடையாளங்களும் இதில் இருப்பதாக முன்னாள் இராணுவ வீரரும், நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான டோபியாஸ் எல்வுட் அமைச்சர் கூறினார்.

ஊதிய முறையின் பெயர்கள் மற்றும் சேவை பணியாளர்களின் வங்கி விவரங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

வேலை மற்றும் ஓய்வூதிய அமைச்சர் மெல் ஸ்ட்ரைட் அரசாங்கத்தின் சார்பாக இத்தாக்குதலை தாக்குதலை உறுதிப்படுத்தினார்.

பெயர்கள், வங்கி விவரங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சேவையில் உள்ள மற்றும் முன்னாள் ஆயுதப்படை உறுப்பினர்களின் தனிப்பட்ட முகவரிகள் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.

இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் முட்டாள்தனம் என்றும் அனைத்து வகையான சைபர் தாக்குதல்களையும் சீனா எப்போதும் கடுமையாக எதிர்க்கிறது மற்றும் ஒடுக்குகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறினார்.


No comments