தேடப்படுவோர் பட்டியிலில் ஜெலென்ஸ்கியைச் சேர்த்தது ரஷ்யா!!


தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ரஷ்யா சேர்த்துள்ளதாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ரஷ்ய உள்துறை அமைச்சகம் வழங்கவில்லை என்றாலும் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்  கீழ் ஒரு வழக்கு திறக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

உக்ரைனின் தரைப்படைகளின் தளபதி ஒலெக்சாண்டர் பாவ்லியுக் மற்றும் முன்னாள் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ ஆகியோரும் தேடப்படுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

No comments