அரசுக்கு அக்கறையில்லை!

சர்வதேச கடலில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற போது கைது செய்யப்படும் இலங்கை மீனவர்கள் விடுதலை தொடர்பில் இலங்கை அரசு

அக்கறையற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

பல நாள் படகில் சர்வதேச கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்த முற்பட்டவேளையில் இடைநடுவே சீசெல்ஸ் கடற்படையினால் காப்பாற்றப்பட்டு சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி மீனவர்கள் விடுவிக்கப்படாதுள்ளனர்.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விரைவாக மீட்டுத் தருமாறு கைதுசெய்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

நான்கு மாதங்களுக்கு மேலாக சீசெல்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பங்கள் மிகவும் துயரத்தில் இருப்பதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

எனினும் அந்த நாட்டில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக அவர்களை விடுவிப்பதில் தாமதப்போக்கு இருப்பதாக அரச மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார்.

எனினும் அதே போன்று இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதிலும் இழுபறிகள் நீடித்துவருகின்றது.


No comments